News May 1, 2024

சந்திரசேகர் ராவ் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

image

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சிர்சில்லாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் சந்திரசேகர் ராவ் பேசியபோது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் இன்றிரவு 8 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 23, 2026

பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்

image

தென் பசிபிக் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் நிகழ்ந்ததால், அதிர்வுகள் எதுவும் ஏற்படவில்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையோ அல்லது அச்சுறுத்தலோ எதுவும் பதிவாகவில்லை. கடல் பகுதிகளில் ஆழமான நிலநடுக்கங்களை விட ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிக ஆபத்தானவை என்று கூறப்படுகிறது.

News March 23, 2026

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

image

வல்லாரை கீரையை அரைத்து சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாக்கும் தன்மை கொண்டது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்த கூடியது. இதில் உள்ள இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. ரத்த சுத்தகரிப்பு, தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக உதவுகிறது.

News March 23, 2026

அட்லி இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா?

image

அல்லு அர்ஜூனை வைத்து அட்லி இயக்கும் படத்தில் அனுஷ்கா ஷர்மா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்காவை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்தில் ஏற்கெனவே தீபிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படக்குழுவினர் இதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!