News March 16, 2024
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. மக்களவைத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையர்கள் இன்று டெல்லியில் வெளியிட்டனர். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். சந்தேகப்படும்படியான வாகனங்கள், இடங்களில் சோதனை நடத்த அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
சீட்களை உயர்த்த தவெகவை பயன்படுத்துகிறதா காங்கிரஸ்?

கூட்டணி சலசலப்புக்கு இடையே திமுகவுடன் செல்வப்பெருந்தகை தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார். ஆனால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகும் <<19272775>>திமுக ஆஃபர் செய்த 25 தொகுதிகளை ஏற்க முடியாது<<>> என கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். அத்துடன் தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது; காங்., பலத்தை தவெக அறிந்துள்ளது என்றும் பேசியுள்ளார். இது சீட்களை உயர்த்துவதற்கான காங்கிரஸின் ஸ்ட்ரேட்டஜி என்கிறார்கள் விமர்சிகர்கள்.
News March 2, 2026
ஈரான் போரால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20-30% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. இந்நிலையில் எச்சரிக்கையை மீறி அங்கு போக்குவரத்தை மேற்கொண்ட 3 கப்பல்களை ஈரான் தாக்கி அழித்தது. இதனால் அங்கு போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 10% அதிகரித்து 80 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் <<19265255>>இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும்<<>> அபாயம் ஏற்பட்டுள்ளது.
News March 1, 2026
BREAKING: தவெகவின் அடுத்த கூட்டத்திற்கு அனுமதி

சேலம், வேலூரை தொடர்ந்து தஞ்சை தவெக நிர்வாகிகள் சந்திப்புக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், 5,000 பேர் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிராபிக் ஜாம் இல்லாமல் நடத்த வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.


