News May 13, 2024
தேர்தல்: 3 மணி நிலவரப்படி 52.60% வாக்குப்பதிவு

மக்களவைக்கான 4ஆம் கட்டத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 52.60% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு இன்று 4ஆவது கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. காலையில் தேர்தல் தொடங்கியது முதல் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களிக்கின்றனர். மதியம் 3 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 66% வாக்குகள் பதிவாகி உள்ளன.
Similar News
News March 17, 2026
திரைப்படமாக உருவாகும் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு?

மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க சமுத்திரகனி திட்டமிட்டுள்ளாராம். இதற்காக அவர், ஸ்டாலின் பற்றிய பல்வேறு தகவல்களை சேகரிப்பதோடு, அவரது பழைய நண்பர்களை சந்தித்து விவரங்களையும் திரட்டி வருகிறாராம். முழு திரைக்கதை உருவான பிறகே தயாரிப்பு பணிகள் துவங்கும் என்றும், ஸ்டாலின் கதாபாத்திரத்தில் சமுத்திரகனியும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
News March 17, 2026
இந்த 12 ஆவணங்களை கொண்டும் வாக்களிக்கலாம்

1.ஆதார், 2.MNREGA அட்டை, 3.வங்கி (அ) அஞ்சலக பாஸ்புத்தகங்கள், 4.தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட இன்ஷூரன்ஸ் கார்டு, 5.ஓட்டுநர் உரிமம், 6.பான் கார்டு, 7.NPR-ன் ஸ்மார்ட் கார்டு, 8.பாஸ்போர்ட், 9.ஓய்வூதிய ஆவணம், 10.மத்திய, மாநில அரசுகள், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஐடி கார்டு, 11.MP, MLA, MLC-க்களுக்கான ஐடி கார்டு, 12.அரசால் வழங்கப்பட்ட தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை.
News March 17, 2026
மதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

தமிழக தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, மதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வைகோ வெளியிடுகிறார். இதில் மக்கள் நலன் சார்ந்த, குறிப்பாக மகளிர் மேம்பாட்டுக்கான அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், 1 தொகுதியில் சொந்த சின்னத்திலும் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.


