News December 1, 2024
2026 தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும்: அண்ணாமலை

2026 சட்டப்பேரவைத் தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். லண்டனில் மேல்படிப்புக்கு சென்ற அவர், இன்று சென்னை திரும்பினார். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவும், ஆம் ஆத்மியும் வித்தியாசமான அரசியல் பாதையில் பயணிப்பதாக சாடினார். தமிழகத்தை ஆளும் திமுக அரசு நல்லது செய்தால் பாஜக நிச்சயம் வரவேற்கும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News September 9, 2025
தேனி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி

தேனி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இதில் மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவது எப்படி?

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், துணை ஜனாதிபதி தேர்தல், லோக்சபா & ராஜ்யசபா உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படும். தேர்தலில் போட்டியிடுபவர் 35 வயதை கடந்தவராகவும் இருக்க வேண்டும். குறைந்தது 20 பரிந்துரையாளர்கள் & 20 ஆதரவாளர்களின் கையொப்பம் & ₹15,000 வைப்பு தொகையை வேட்புமனுவில் வழங்கியிருப்பார். மெஜாரிட்டி பெறுபவர் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும் தேர்வாகிறார்.
News September 9, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.9) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று(செப்.8) சவரனுக்கு ₹720 உயர்ந்த நிலையில், இன்றும் ₹720 என தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் 1 கிராம் ₹10,150-க்கும், ஒரு சவரன் ₹81,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹140-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,40,000-க்கும் விற்பனையாகிறது.