News March 26, 2026
ELECTION: அண்ணாமலை விலகல்.. பரபரப்பு காரணம்

தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறி அண்ணாமலை, பாஜக <<19472595>>தலைமைக்கு கடிதம்<<>> எழுதியுள்ளார். தேர்தல் ரேஸில் இருந்து அண்ணாமலையின் விலகல் முடிவால் அவரது ஆதரவாளர்கள் பலரும் SM-ல் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அண்ணாமலை போட்டியிட விரும்பிய கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் அல்லது சொந்த தொகுதியான அரவக்குறிச்சி பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்பதே இம்முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 5, 2026
TN-ல் பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கும் பவன் கல்யாண்!

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வெளிமாநில அரசியல் தலைவர்கள் நாளை முதல் தமிழகத்தை நோக்கி படையெடுக்க திட்டமிட்டுள்ளனர். நாகர்கோவில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தியை ஆதாரித்து, ஆந்திரா DCM பவன் கல்யாண் நாளை பரப்புரை மேற்கொள்கிறார். அதேபோல், நாளை மதுரையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மகராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பரப்புரை செய்கிறார். <<-se>>#TNElection2026<<>>
News April 5, 2026
தங்கம் கொள்முதலை RBI பாதியாக குறைத்தது!

தங்கம் கொள்முதலை RBI குறைத்துள்ளது. உலகத் தங்க கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் துருக்கி 8 டன், ரஷ்யா 6 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளன. 2025-ம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 26 டன் தங்கம் கொள்முதல் செய்த RBI, இந்தாண்டின் முதல் 2 மாதங்களில் மாதத்திற்கு 12.5 டன் மட்டுமே வாங்கியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு தங்கம் விலை மந்தநிலையில் நீடித்து வருகிறது.
News April 5, 2026
EPS வதந்தி வாந்தி எடுக்கிறார்: ஸ்டாலின்

EPS சொல்லும் பொய்களை வைத்து புத்தகமே போடலாம், சங்கிகள் கூட்டத்தில் சேர்ந்ததால் அவர்களை போன்றே வாட்ஸ்அப் வதந்திகளை வாந்தி எடுக்கிறார் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விருதுநகர் பரப்புரையில் பேசிய அவர், விசுவாசத்திற்கு கட்டப்பா என்றால், துரோகத்திற்கு EPS என தெரிவித்துள்ளார். அவர் செய்த துரோகத்தை எண்ணிவிட முடியாது; ஆனால் தோல்விகளை எண்ணிவிடலாம், இப்போது 10, தேர்தலுக்கு பின் 11 என்றும் சாடியுள்ளார்.


