News March 29, 2025
எக்ஸ் தளத்தை விற்ற எலான்… யாருக்கு தெரியுமா?

சேட்டை பிடிச்ச செயல்களை செய்யும் எலான் மஸ்க் தனது X தளத்தை விற்பனை செய்திருக்கிறார். வேறு யாருக்கும் இல்லை. அவருக்கே விற்பனை செய்திருக்கிறார். புரியவில்லையா? X நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு தனது மற்றொரு நிறுவனமான X AI கையகப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், X AI உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆய்வு நிறுவனமாக மாறியுள்ளதாகவும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 1, 2025
காலையில் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் செல்கிறதா?

இரவு முழுவதும் தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதான் காலையில் சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக மாறுவதற்கான முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இரவில் நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலில் நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகச் சிறுநீர் அடர் நிறமாக மாறுகிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், சிறுநீர் அடர் நிறமாக மாறக்கூடும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
News April 1, 2025
3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பேரவை கூடுகிறது!

3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கவுள்ளது. காலை 9.30 மணிக்குப் பேரவை தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெறும். இந்த விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசுவர். இதற்குப் பதில் அளித்து, துறை அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
News April 1, 2025
கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதியதே விபத்துக்கு காரணம்.