News November 22, 2024
ஏக்நாத் ஷிண்டே கிங்கா? கிங் மேக்கரா?

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அனைவரது கவனமும் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் திரும்பியுள்ளது. சிவசேனாவை தன்வசம் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தற்போது 38 எம்.எல்.ஏக்களுடன் முதல்வராக உள்ளார். 102 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக DCM பதவியைத் தான் வைத்துள்ளது. Exit Polls கணிப்புகள் படி நாளை தேர்தல் முடிவுகள் வந்தால் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே கிங்(CM), கிங் மேக்கராக உருவெடுப்பார்.
Similar News
News August 14, 2025
அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

*சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், அதில் தான் உங்களது வலிமை உள்ளது.
*நீங்கள் மக்களை மதிப்பீடு செய்துகொண்டிருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரம் இருக்காது.
*மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல.
*உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள்.
News August 14, 2025
ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு வழங்க கோரிக்கை

2023-ம் ஆண்டு லண்டனில் சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதனை எதிர்த்து சாவர்க்கரின் பேரன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். புனே நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், ராகுல் வழக்கறிஞர் தரப்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் சாவர்க்கர், கோட்சே ஆதரவாளர்களால் ராகுல் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
கூலி ரஜினி கிரீடத்தின் வைரம்: SK

திரைத்துறையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்த ரஜினிக்கு SK வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தங்களைப் பார்த்து, தங்களைப் போல மிமிக்ரி செய்து, தற்போது தங்களது துறையிலேயே தானும் இருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ளார். திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள் என்றும், தங்களது கிரீடத்தில் மற்றுமோர் வைரமாக கூலி ஜொலிக்கும் என தெரிவித்துள்ளார்.