News April 4, 2025
முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்தது

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் 20 காசுகள் விலை குறைந்து ₹4.45ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று திடீரென விலை குறைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பிற பகுதிகளில் சில்லறை விலையில் 1 முட்டை ₹5 முதல் ₹5.50 வரை விற்பனையாகிறது. உற்பத்தி அதிகரிப்பு, அதேநேரத்தில் நுகர்வு குறைவு காரணமாக இந்த விலை குறைப்பு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 11, 2026
சென்னை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

சென்னை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 11, 2026
கனமழை.. பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், க.குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 11, 2026
₹15,000 ஓய்வூதியம் தரவேண்டும்: ஜி.கே.வாசன்

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். அவர்களுக்கு ஓய்வூதியமாக ₹2,000 வழங்குவது போதுமானது அல்ல என்றும், அவர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹15,000 அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.


