News April 20, 2025

முட்டை விலை கடும் சரிவு

image

நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ₹3.90-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தால் முட்டை சேதமடைவதால், விலை குறைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் ₹4.90-ஆக இருந்த முட்டையின் விலை மளமளவென சரிந்து ₹4-க்கு கீழ் சென்றுள்ளது. கோடைக்காலம் முடியும் வரை முட்டை விலை குறைவாகவே இருக்கும் என்று நாமக்கல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News November 27, 2025

இந்த வார ஓடிடி ட்ரீட்!

image

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க அரை டஜன் படங்கள் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. *விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ : நவ.28, நெட்பிளிக்ஸ் *கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் ‘ரேகை’: நவ.28, ஜீ5 * ரியோ ராஜின்’ஆண்பாவம் பொல்லாதது’: நவ.28, ஹாட்ஸ்டார் *’கிறிஸ்டினா கதிர்வேலன்’: நவ.28, ஆஹா *ஸ்ரீலீலாவின் ‘மாஸ் ஜாதரா’: நவ.28, நெட்பிளிக்ஸ் *’பெட் டிடெக்டிவ்’: நவ.28, ஜீ5.

News November 27, 2025

செல்வாக்கு இல்லாதவர் செங்கோட்டையன்: அமைச்சர்

image

செங்கோட்டையன் போன்ற மூத்த அரசியல்வாதி தவெகவில் இணைந்ததால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றதால் எந்த பாதிப்பும் திமுகவுக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் எல்லா நடிகர்களையும் பார்க்கவும்தான் மக்கள் கூட்டம் வருகிறது என தெரிவித்த அவர், எல்லோரும் MGR ஆகிவிட முடியாது எனவும் கூறியுள்ளார்.

News November 27, 2025

உடலில் நச்சுகளை நீக்க உதவும் உணவுகள்

image

பெரும்பாலான உடல்நலப் பாதிப்புகளுக்கு காரணம், உடலில் தேங்கும் கழிவுகள் தான். ரத்தத்திலும் செல்களிலும் கழிவுகள் அதிகமாகும் போது, அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த கழிவுகளை நீக்க (detox செய்ய) சில உணவுகள் உதவும். அவற்றில் சிலவற்றை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். இந்த பயனுள்ள தகவலை பலருக்கும் SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!