News April 5, 2025
முட்டை விலை கடும் சரிவு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இரண்டாவது நாளாக 20 காசுகள் குறைந்துள்ளது. இதனால், ₹4.25க்கு விற்பனையாகிறது. சில்லறை விலையில் ₹5 முதல் ₹5.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2 நாள்களில் மட்டும் 40 காசுகள் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை, நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உங்கள் ஊரில் முட்டை விலை என்ன?
Similar News
News April 5, 2025
இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் மோடி அஞ்சலி

கொழும்பு அருகே உள்ள இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அமைதிக்காக உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களை நினைவு கூர்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரதமராக ராஜீவ் இருந்தபோது LTTE, இலங்கை ராணுவம் இடையே அமைதி ஏற்படுத்த இந்திய அமைதிப்படை சென்றது குறிப்பிடத்தக்கது.
News April 5, 2025
4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

மாநிலத்தில் 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காசிவிசுவநாத சாமி கோயில் குடமுழுக்கு, பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கு ஏப்.7, 11 தேதிகளிலும், பங்குனி உத்திரத்துக்காக நெல்லை மாவட்டத்துக்கு ஏப்.11 அன்றும், புதுகோட்டையில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்துக்காகவும், திருவாரூரில் ஆழித்தேரோட்டத்துக்காக ஏப்.7-ம் தேதியும் உள்ளூர் விடுமுறையாகும்.
News April 5, 2025
ஏசியை பராமரிப்பது எப்படி?

*ஏர் ஃபில்டர்களை எப்போது சுத்தமாக பராமரிக்கவும். இதனால் காற்று உறிஞ்சப்படுவது எளிதாகும். *வெளியில் இருக்கும் விண்டோ யூனிட் சற்றே குனிந்த நிலையில் இருந்தால், கண்டன்சேஷன் தண்ணீர் எளிதாக வெளியாகும் *மின்சார லோட் தாங்காத எக்ஸ்டென்ஷன் கார்டை பயன்படுத்தவே கூடாது *இடி இடிக்கும் போது ஏசி இணைப்பை துண்டிக்கவும்.