News April 23, 2025
முட்டை விலை குறைந்தது

நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நிர்ணயம் செய்யும் விலையின் அடிப்படையிலேயே அன்றாடம் தமிழகம் முழுவதும் முட்டை விலை முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல்லில் 1 முட்டையின் விலை ரூ.4.05ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் சில்லரை கடைகளில் 1 முட்டை ரூ.4.40-ரூ.4.50 வரை விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் முட்டை விலை என்ன? கீழே கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 13, 2025
தம்பி விஜய்க்கு தபால் போடவுள்ளேன்: தமிழிசை

‘SIR தேவை’ என்ற புத்தகத்தை தம்பி விஜய்க்கு தபாலில் அனுப்பவுள்ளதாக தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். SIR-க்கு எதிராக தவெக போராட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலுக்கு பதிலளித்த அவர், திமுகதான் SIR-க்கு எதிராக அரசியலுக்காக போராட்டம் நடத்துகிறது என்றால், புதுக்கட்சியான தவெகவும் போராட்டம் நடத்துவது என்பது தேவையற்றது என்றார். இந்த SIR பணிகள், தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
News November 13, 2025
பெண்களை விட ஆண்களே இதை அதிகம் செய்ய வேண்டும்!

இதயநோய் அபாயத்தை குறைக்க உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆனால், பெண்களை விட ஆண்களுக்கு தான் உடற்பயிற்சி அதிகம் தேவை என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆண்கள் ஒரு நாளைக்கு சுமார் 75 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், பெண்கள் ஒரு நாளைக்கு 35 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதுமாம். பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன், கொழுப்பை கரைப்பதற்கு உதவுவதே இதற்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது.
News November 13, 2025
3 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் RN ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமித்த அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா, தமிழ்நாடு ஊராட்சிகள் 5-வது திருத்த மசோதா, தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்த சட்ட மசோதா ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நிலுவையிலுள்ள மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி வருகிறார்.


