News May 3, 2024
முட்டை விலை தொடர்ந்து உயர்வு

கடும் வெயிலின் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாமக்கல்லில் மொத்த கொள்முதலில் ஒரு முட்டையின் விலை ₹20 காசுகள் உயர்ந்து ₹4.80க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் முட்டை விலை ₹65 காசுகள் உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சில்லரை விற்பனை விலை உயர்ந்து, 1 முட்டை ₹6 – ₹7 வரை விற்பனையாகிறது.
Similar News
News February 12, 2026
ஸ்டேஷனிலேயே பெண் போலீஸுடன் தனிமை.. VIRAL

உ.பி.,யின் பிஜ்னோர் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே, ஹெட் கான்ஸ்டபிள் & பெண் காவலர் தனிமையில் இருந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், தனிமையில் இருந்த வீடியோவை எடுத்தது யார், ஒருவேளை மிரட்டுவதற்காக வீடியோ எடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர். காக்கி உடையின் கண்ணியம் பாதிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News February 12, 2026
எச்சரிக்கை: NOTES ஆப்பில் பாஸ்வேர்டு சேமிக்கிறீர்களா?

பலர் தங்களது தனிப்பட்ட பாஸ்வேர்டுகளை மொபைலில் உள்ள ‘NOTES’ ஆப்பில் சேமித்து வைக்கின்றனர். இது பாதுகாப்பானது அல்ல என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மொபைல் ஹேக் செய்யப்பட்டாலோ, கிளவுட் சேமிப்பில் குறைபாடு ஏற்பட்டாலோ, அனைத்து தகவல்களும் எளிதில் கசிந்துவிடலாம். முக்கியமான கணக்குகளுக்கு பிரத்யேக பாஸ்வேர்டை பயன்படுத்துவது பாதுகாப்பானது. உங்கள் தனிப்பட்ட தகவல்கள் உங்கள் பொறுப்பு.
News February 12, 2026
மகளிர் உரிமைத் தொகை.. முக்கிய அப்டேட்

மகளிருக்கு மாதந்தோறும் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதனிடையே, விதிகளின்படி 5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இதில் பயன்பெறும்போது, IT தாக்கல் செய்தாலும், அதிகக் கடனில் வாழும் தங்களையும் இத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். ஆனால், திட்ட விதிகள், பலகட்ட பரிசீலனைகளுக்கு பிறகே தகுதியானவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


