News May 16, 2024
முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

கோழி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ₹5.70ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் முட்டையின் சில்லரை விலை ₹7 முதல் ₹8 வரை உயர்ந்துள்ளது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முட்டை விலை ₹5.80ஐ தொட்டது. தற்போது விலை ₹5.70ஐ தொட்டிருக்கும் நிலையில் விரைவில் வரலாற்று உச்சத்தை தொடும் என்று பண்ணையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Similar News
News January 22, 2026
அஜித் குமார் மரணம்.. புதிய தகவல் வெளியானது

கோயில் காவலாளி அஜித் குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இவ்வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் தற்போது ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. மேலும், நிகிதாவின் நகை திருட்டு வழக்கின் நிலை குறித்து சிபிஐ விசாரணை அதிகாரி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
News January 22, 2026
இனி டாக்டர் ரோஹித் சர்மா!

மகாராஷ்டிராவின் அஜிங்கியா DY பாட்டீல் பல்கலை., ரோஹித் சர்மாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. கிரிக்கெட்டில் அவரின் ஈடு இணையற்ற பங்களிப்பு & முன்மாதிரியான தலைமைப் பண்பையும் கெளரவிக்கும் விதமாக இந்த பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் யூனிவர்சிட்டியின் பட்டமளிப்பு விழாவில், ஹிட்மேன் கெளரவிக்கப்படவுள்ளார்.
News January 22, 2026
நான் Anti Muslim- ஆ? மோகன்.ஜி விளக்கம்!

’திரௌபதி 2’ டிரெய்லர் பார்த்துவிட்டு Anti Muslim என தன்னை சொல்வதாகவும், ஆனால் இப்படத்தால் இந்து – இஸ்லாமிய சகோதரத்துவம் இன்னும் அதிகமாகும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். மேலும், திரௌபதி படத்தால் தனக்கு பட்டியலின மக்களுக்கு எதிராக படம் எடுக்கிறான் என்ற பெயர் கிடைத்தது என்றும், திரௌபதி 2 படம் பார்த்தபின், இது முஸ்லிம்களுக்காகவே எடுத்திருக்கிறேன் என்பதை மக்கள் உணர்வார்கள் என்றார்.


