News August 17, 2024
முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது

முட்டை விலை 5 காசுகள் உயர்ந்துள்ளதாக, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. முட்டை விலை சமீப நாள்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், 5 காசுகள் உயர்ந்து மொத்த விலையில் ஒரு முட்டை ₹4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லறை விலையில் ஒரு முட்டை ₹6 வரை விற்பனையாகிறது.
Similar News
News November 19, 2025
Business Roundup: UPI-ல் தனியார் வங்கிகள் கடன் சேவை

*இ-காமர்ஸ் ஏற்றுமதியாளர்களுக்கு பிரத்யேக கிரெடிட் கார்டு வழங்கப்பட உள்ளது. *இந்தியாவின் விமான சரக்கு ஏற்றுமதி அதிகரிப்பு. *UPI வாயிலாக தனியார் வங்கிகள் கடன் வழங்கும் சேவையை தொடங்க உள்ளன. *கடந்த ஜூலை – செப்டம்பர் வரை, 10.39 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை. *சர்க்கரை குறைந்தபட்ச விற்பனை விலையை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை. *அமெரிக்காவிற்கான இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 8.58% சரிவை கண்டுள்ளது.
News November 19, 2025
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஊதியம் உயர்வு

தமிழகத்தில் SIR பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், BLO-க்களுக்கான ஊதியத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ₹1,000-லிருந்து ₹2,000-ஆகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் ₹6,000-லிருந்து ₹12,000-ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ₹12,000-லிருந்து ₹18,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
News November 19, 2025
விஜய்க்கு ஆதரவாக பேசிய A.C.சண்முகம்

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் விஜய்க்கு ஆதரவாக புதிய நீதி கட்சித் தலைவர் A.C.சண்முகம் பேசத் தொடங்கியுள்ளார். 2026 தேர்தலில் களமிறங்கும் விஜய்க்கு வாக்கு வங்கி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 50,000 வாக்குகள் வரை விஜய் பெறுவார். தவெகவில் இருந்து வலுவான வேட்பாளர்கள் போட்டியிட்டால் எளிதாக வெற்றிபெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


