News April 11, 2025
அங்கன்வாடியில் வாரத்தில் 2 நாட்களுக்கு Egg Fried Rice!

அங்கன்வாடி குழந்தைகள் வாய்க்கு ருசியாக சாப்பிட Egg fried rice, கொண்டைக்கடலை சுண்டல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா அரசுதான் மதிய சத்துணவு திட்டத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. ஊட்டச்சத்துடன் ருசியாகவும் சாப்பிட வேண்டும் என்பதற்காக வாரத்தில் 2 நாள்களுக்கு இந்த புதிய மெனு சேர்க்கப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் கொடுத்ததும் 26 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடிகளில் அமலாகவுள்ளது.
Similar News
News April 18, 2025
பைலட் பயிற்சிக்கான விதியில் அதிரடி மாற்றம்?

12-ம் வகுப்பில் கலை, வணிகவியல் பிரிவுகளில் வெற்ற பெற்ற மாணவர்களும் இனி விமான பைலட் ஆகலாம். இதற்காக விதிமுறைகளை மாற்ற விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. தற்போது 12-ம் வகுப்பில் அறிவியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விமான பைலட்டுக்கான பயிற்சி பெற முடியும். அந்த அடிப்படை கல்வித் தகுதியில் மாற்றம் கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
News April 18, 2025
1-5ம் வகுப்பு பள்ளிகளுக்கு 45 நாள்கள் விடுமுறை துவக்கம்

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் நிறைவடைந்தன. இதையடுத்து அவர்களுக்கு இன்று முதல் ஜூன் 1 வரையிலான 45 நாள்கள் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர். சிலர் தாத்தா-பாட்டி ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு தயாராகி வருகின்றனர். மேலும் சிலர், அடுத்த ஆண்டுக்காக சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
News April 18, 2025
₹10,000ஐ தொட்ட தங்கம் விலை

தமிழ்நாட்டில் 1 கிராம் சொக்கத் தங்கத்தின் விலை முதல் முறையாக ₹10,000-ஐ கடந்துள்ளது. சொக்கத் தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தங்கம், நேற்று ஒரு கிலோ ₹1 கோடியை கடந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், இந்தியாவிலும் தங்கம் விலை ராக்கெட் போல உயருகிறது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹8,945-ஆக உள்ளது.