News April 26, 2025
முட்டை, மீன்கள் விலை அதிகரிப்பு

மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்வதில்லை. தற்போது நாட்டுப் படகில் மட்டுமே மீன்பிடித்து வரப்படுகிறது. இதனால் மீன்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஷீலா மீன் ஒரு கிலோ 1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊழி, பாறை மீன்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ₹4.10ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News April 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ ஏப்ரல் 27 – சித்திரை- 14 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: அமாவாசை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ பிறை: தேய்பிறை
News April 27, 2025
இளம்பெண் பலமுறை பலாத்காரம்

மகாராஷ்டிராவில் 24 வயதான இளம்பெண் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்பெண் அளித்த புகாரில், ஆக.10 – ஏப்.23-க்குள் ஐ.டி. ஊழியர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோ, போட்டோ எடுத்து ₹2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது அந்தரங்க போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அப்பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
News April 27, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!