News March 20, 2025
”ஈ சாலா கப் நம்தே” மனம் திறந்த டிவில்லியர்ஸ்

”ஈ சாலா கப் நம்தே” எனக் கூறுவதை தயவுசெய்து நிறுத்த வேண்டும் என விராட் தன்னிடம் கூறியதாக AB டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோலி அனுப்பிய மெசேஜை பகிர்ந்துள்ள அவர், இது விராட்டிடம் இருந்து தனக்கு நேரடியாக வந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், நடப்பு IPL சீசனில் NO 18 ஜெர்சி அணியும் வீரர் இருக்கிறார்; RCB கோப்பையை வென்றால், கோலியுடன் சேர்ந்து நானும் கொண்டாடுவேன் எனவும் கூறியுள்ளார்
Similar News
News March 20, 2025
தமிழக தேர்வர்கள் அலைக்கழிப்பு!

தெலங்கானாவில் ரயில்வே லோகோ பைலட் தேர்வு மையம் அமைக்கப்பட்டதற்கு தமிழக தேர்வர்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தமிழகத்தில் தேர்வு மையத்தை மாற்றுமாறு கூறியும் ரயில்வே அதை ஏற்காததால், வேறு வழியின்றி தமிழக தேர்வர்கள் நேற்று நடக்கவிருந்த தேர்வுக்காக ஐதராபாத் சென்றிருந்தனர். ஆனால், அதன் பிறகே தேர்வு ஒத்திவைக்கப்பட்ட தகவல் அவர்களுக்கு கிடைத்தது. இதனால், தமிழக தேர்வர்கள் அதிருப்தியடைந்தனர்.
News March 20, 2025
போரை நிறுத்தவே 400 பேரைக் கொன்றோம்: இஸ்ரேல்

ராணுவ அழுத்தம் கொடுத்து ஹமாஸை அடிபணிய வைக்கவே, 400 பேர் கொல்லப்பட்ட சமீபத்திய தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரீவன் அசார் தெரிவித்துள்ளார். ஹமாஸுக்கு இரண்டே வாய்ப்புகள் மட்டும் தான் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். USA, இஸ்ரேல் தரும் ஆஃபர்களை ஏற்றுக் கொள்வது அல்லது பணயக் கைதிகளை விடுவித்துவிட்டு காசாவில் இருந்து வெளியேறுவதுதான் அந்த வாய்ப்புகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 20, 2025
மனைவியை ஒருமுறை தொட ₹5,000 கேட்பதாக புகார்

ஒருமுறை தொடுவதற்கு ₹5,000 கேட்பதாக, மனைவி மீது கணவன் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த IT ஊழியர் ஸ்ரீகாந்த் – பிந்துஸ்ரீ ஜோடிக்கு கடந்த 2022இல் திருமணம் நடந்துள்ளது. கணவருக்கு பல்வேறு நிபந்தனை விதித்த மனைவி, WFH ஆபீஸ் மீட்டிங்கின் போது லேப்டாப் முன்பு நடனமாடியதால் தனது வேலையே போய்விட்டதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அடக்கடவுளே..!