News March 20, 2024

நாடு முழுவதும் கல்விக் கடன் ரத்து

image

நாடு முழுவதும் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேளாண் விளை பொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவு +50% லாபம் என்பதை வலியுறுத்தி குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும். ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 361 நீக்கப்படும். முதல்வர்களின் ஆலோசனைப்படி ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள்.

Similar News

News November 4, 2025

மாதம்பட்டி ரங்கராஜ் கைதா?… பரபரப்பு தகவல்

image

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது குழந்தைக்கு அப்பா தான்தான் என்றும் <<18195589>>மாதம்பட்டி ரங்கராஜ்<<>> ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இதனால், மாதம்பட்டி கைது செய்யப்படலாம்.

News November 4, 2025

கம்பெனிக்காக 17 ஆண்டுகள் உழைத்த நபர்.. கண்ணீர் பதிவு

image

17 ஆண்டுகள் கடுமையாக உழைத்தும் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ஊழியர் ஒருவரின் X பதிவு வைரலாகி வருகிறது. நான் வேலையிழப்பு வேதனையில் இருந்தபோது குழந்தைகளை முதல்முறையாக பள்ளிக்கு அனுப்பினேன். அப்போது அவர்கள் முகத்தில் தெரிந்த சிரிப்பு எனக்கு கண்ணீரை வரவழைத்தது. இதுவரை என்ன இழந்தேன் என இப்போது தெரிகிறது. நிறுவனங்கள் ஒருபோதும் தியாகத்தை மதிப்பதில்லை என அவர் பதிவிட்டுள்ளார்.

News November 4, 2025

கோவை கொடூரத்தை தடுக்க தவறியது ஏன்? அன்புமணி

image

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி, இந்த கொடூரத்தை தடுக்க தமிழக அரசு தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். போதை பொருள்களின் நடமாட்டம் சிறிதளவு கூட குறையவில்லை என்று கூறிய அவர், அந்த அளவுக்கு தமிழக அரசும், காவல்துறையும் செயலிழந்துள்ளதாக விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்திற்காக, தமிழக ஆட்சியாளர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!