News June 28, 2024
கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது

சென்னை திருவான்மியூரில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது. அரங்கிற்குள் வருகை தந்த விஜய்க்கு மாணவர்கள், பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மாணவர்களுடன் ஒருவராக அவர் அமர்ந்துகொண்டார். குறிப்பாக, நெல்லையில் சாதிய ஆதிக்க கும்பலால் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரைக்கு அருகில் உட்கார்ந்த விஜய், சிறிது நேரம் அவருடன் கலந்துரையாடினார்.
Similar News
News January 7, 2026
SPORTS 360°: டி20-ல் முதலிடத்தை இழந்த தீப்தி சர்மா

*விஜய் ஹசாரே தொடரில் கர்நாடகா, மும்பை, பஞ்சாப் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. டி20 பவுலிங் ரேங்கிங் பட்டியலில் தீப்தி சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.. *உ.பி.,யில் நடைபெறும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. *ISL கால்பந்து போட்டி பிப்ரவரி 14-ம் தேதி தொடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 7, 2026
விஜய்யை மறைமுகமாக சீண்டிய உதயநிதி

விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தவெகவை விமர்சிப்பது DCM உதயநிதி ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது. அந்தவகையில் புதிது புதிதாக யார்(விஜய்) வேண்டுமானாலும் வரலாம் எனவும் ஆனால் அவர்கள் எல்லாம் அட்டைதான், காற்று அடித்தால் பறந்துவிடுவார்கள் என்றும் சாடியுள்ளார். மேலும் பாஜக உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பணிந்து போக இது அதிமுக இல்லை என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
வரலாற்றில் இன்று

*1938 – நடிகை சரோஜாதேவி பிறந்த தினம்.
*1953 – இயக்குநர் பாக்யராஜ் பிறந்தநாள்
*1959 – பிடல் காஸ்ட்ரோவின் அரசை USA அங்கீகரித்தது.
*1972 – பின்னணி பாடகர் எஸ்.பி.சரண் பிறந்தநாள்
*1980 – மீண்டும் இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சி அமைந்தது.


