News April 3, 2025
பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

வரும் 6ஆம் தேதி தமிழகம் வரும் PM மோடியை இபிஎஸ் சந்தித்துப் பேசவுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இபிஎஸ்ஸை தொடர்ந்து அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜக முன்னணி தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில், வரும் 6ஆம் தேதி புதிய பாம்பன் தூக்குப் பாலத்தை திறக்க வருகை தரும் PM மோடியை EPS சந்தித்துப் பேசவுள்ளார். அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸும் PM மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
Similar News
News March 20, 2026
குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை உறுதி: கனிமொழி

குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் சேர்ந்தே உறுதிப்படுத்த முடியும் என கனிமொழி தெரிவித்துள்ளார். விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பது உறுதி எனவும் தனது X பக்கத்தில் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவும், துயரிலிருந்து மீண்டு வரவும் துணையாக இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 20, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 20, பங்குனி 6 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: துவிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு▶பரிகாரம்: வெல்லம்.
News March 20, 2026
போரில் இஸ்ரேல் வெற்றிபெற போகிறது: நெதன்யாகு

ஈரானுடனான போரில் தாங்கள் வெற்றிபெற போவதாக இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்துள்ளார். எதிர்பார்த்ததை விட முன்னதாகவே போர் முடிவுக்கு வரும் எனவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவை போரில் இஸ்ரேல் <<19412334>>இழுக்கவில்லை <<>>என்றும், இருவருமே ஈரானை குறி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என யாராவது சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


