News August 13, 2024
மாஞ்சோலை மக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முன்னிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சந்தித்தனர். அப்போது தங்களது வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் டான் டீ மூலமாக தேயிலை நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
Similar News
News November 14, 2025
நெல்லை: ரூ.88,635 ஊதியத்தில் வேலை

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 14, 2025
நெல்லை: தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

தேவர்குளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நேற்று தேவர் குளத்தில் இருந்து ராமையன்பட்டிக்கு பைக்கில் மானூர் அருகே அழகிய பாண்டியபுரம் சென்றார். அப்போது நெல்லையில் இருந்து ஸ்ரீவல்லிபுத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மானூர் போலீசார் அவரது உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 14, 2025
நெல்லை: பெண்ணிடம் கத்தியை காட்டி செயின் பறிப்பு

மானூர் கீழபிள்ளையார் குளத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் கடந்த 8-ம் தேதி தாமிரபரணி ஆற்றில் வைத்து கத்தியை காட்டி மிரட்டி 4 பவுன் செயினை பறித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து முத்துலட்சுமி ஜங்ஷன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்து நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து மற்றும் ஹரி கிருஷ்ணா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


