News May 10, 2024
பிரேமலதாவுக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு நேற்று பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருதை விஜயகாந்த் சார்பாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று பெற்றுக்கொண்டார். இந்நிலையில், விருதினைப் பெற்ற பிரேமலதாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜயகாந்த், பிரேமலதாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Similar News
News March 16, 2026
முகத்தை பளபளப்பாக்கும் பியூட்டி ஃபேஸ் மாஸ்க்!

சருமத்தைப் பாதுகாக்க தக்காளி மிகவும் உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கரும்புள்ளிகள், எண்ணெய் பசை உள்ளிட்ட பாதிப்புகளை குறைக்க தக்காளி பேஸ் பேக் உதவுமாம். அதற்கு 2 ஸ்பூன் தக்காளி சாறு, 1 ஸ்பூன் தேன், சிறிது தயிர் ஆகியவற்றைக் கலந்து பேக் தயாரிக்கவும். இந்த பேக்கை 20 நிமிடங்கள் முகத்தில் வைத்திருக்கவும். வாரத்திற்கு 2 (அ) 3 முறை இந்த பேக்கை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்குமாம்.
News March 16, 2026
அமித்ஷாவும் புஸ்ஸி ஆனந்தும் நண்பர்கள்: அப்பாவு

அமித்ஷா சொல்லித்தான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அமித்ஷாவும் புஸ்ஸி ஆனந்தும் நண்பர்கள் என்றும் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். விஜய்யுடன் பேரம் பேசுவதால்தான் இதுவரை NDA கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
News March 16, 2026
ஒவ்வொரு ஊரிலும் விஜய்யின் மக்கள் சந்திப்பு: ஆதவ்

சிபிஐ விசாரணை முடிந்த நிலையில், இனி மக்களின் ஆதரவோடு ஒவ்வொரு ஊரிலும் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழும் என ஆதவ் ஆர்ஜூனா தெரிவித்துள்ளார். டெல்லியில் தொடங்கிய பிரசாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் அவதூறுகள் அனைத்தும் தோற்றுப் போனதாகவும் தெரிவித்துள்ளார்.


