News September 27, 2025

கரூர் துயரம்: இபிஎஸ் இரங்கல்

image

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 33க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக இபிஎஸ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேரில் சென்று உதவி வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News January 1, 2026

இன்று முதல் கார்களின் விலை உயர்கிறது

image

தீபாவளி பரிசாக மத்திய அரசு GST வரியை குறைத்ததால், பைக், கார்களின் விலையும் சரிந்தது. இதன் காரணமாக, வாகன பிரியர்கள் புதிய வாகனங்களை ஆர்வமுடன் வாங்கினர். இந்த நிலையில், உற்பத்தி செலவை காரணம் காட்டி, இந்தியாவில் இன்று முதல் கார்களின் விலை 3% வரை உயர்த்தப்படுகிறது. அதன்படி, Honda, Hyundai, Renault, Nissan, BYF, BMW உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் கார்களின் விலையை உயர்த்துகின்றன.

News January 1, 2026

வெந்நீரில் வாழும் இந்த அதிசய மீனை பற்றி தெரியுமா?

image

USA, நெவாடா பாலைவனத்தில் ஒரு சிறிய பாறை இடுக்கிற்குள் வாழும் ‘Devils Hole pupfish’ மீன்கள் அறிவியலுக்கே சவால் விடுகின்றன. வெறும் கட்டைவிரல் அளவே உள்ள இவை, 34°C கொதிக்கும் வெந்நீரில் ஆக்சிஜன் இல்லாமலே உயிர்வாழும் Paradoxical Anaerobism என்ற விந்தையை கொண்டுள்ளன. உலகின் மிகச்சிறிய இடத்தில் வாழும் இந்த முதுகெலும்புயிரி, மரபணு சவால்களை மீறி பல நூற்றாண்டுகளாக உயிர்வாழ்வது ஒரு தீராத உயிரியல் மர்மம்!

News January 1, 2026

விஜய்யை இதனால்தான் ஆதரிக்கவில்லை: மன்சூர்

image

MGR போல விஜய் மக்கள் போராட்டம் செய்திருந்தால் ஒட்டுமொத்த நாடும் அவரோடு நின்றிருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என மன்சூர் அலிகான் பேசியுள்ளார். விஜய்யை முதலில் நானும் ஆதரித்ததாக கூறிய அவர், விஜய் யாரால் அரசியலில் இறக்கிவிடப்பட்டவர் என தெரிந்ததால் ஆதரவு அளிப்பதில்லை என கூறியுள்ளார். மேலும், விஜய் ஜெயிக்கக்கூடாது என சொல்லவில்லை, ஆனால் அவர் களத்தில் போராடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!