News May 9, 2024
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க ED கடும் எதிர்ப்பு

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பரப்புரை என்பது ஒருவருக்கு அடிப்படை உரிமை அல்ல என ED கூறியுள்ளது. மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது, உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ள நிலையில், ஜாமின் வழங்க ED கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Similar News
News November 17, 2025
ஞாபகம் வருதா.. தீப்பெட்டி ரயில்!

சிறுவயதில் விளையாடுவதற்கு பொம்மை வாங்க அப்பாவிடம் காசு இருக்காது. அதனால், நாமே சில பொம்மைகளை உருவாக்குவோம். அதில் ஒன்று தீப்பெட்டி ரயில். தீர்ந்து போன தீப்பெட்டிகளை பாடுபட்டு சேகரித்து, எல்லா பெட்டிகளையும் ஒன்றாக இணைத்து இந்த ரயிலை செய்வோம். ’கூ’ என்று சத்தம் போட்டுக்கொண்டே திண்ணையில் ரயில் ஓட்டியது மகிழ்ச்சியான அந்த காலம். உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா?

விஜய்யுடன் கூட்டணியா? செங்கோட்டையன் பதில்

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் குறித்து செங்கோட்டையனின் ரியாக்ஷன் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தனது பதிலால் கட்சிக்குள் புதிய சர்ச்சை எழுவதை தவிர்க்கவே அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதேநேரம், அதிமுக ஒருங்கிணைப்பு வெகு விரைவிலேயே நடக்கும் என்றார்.