News April 7, 2025

கே.என்.நேருவின் மகன், சகோதரர் வீட்டில் ED சோதனை

image

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான TVH கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை(ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அதிகாலை முதலே 5 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அதேபோல், பெரம்பலூர் தொகுதி எம்.பியும், கே.என்.நேருவின் மகனுமான அருண் நேரு வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News January 6, 2026

₹6,000.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 2016 செப்.,க்கு முன் ஓய்வுபெற்றவர்களுக்கு 221%-ல் இருந்து, 257% ஆகவும், 2016 செப்.,க்கு பின் ஓய்வு பெற்றவர்களுக்கு 42%-ல் இருந்து 58% ஆகவும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்சம் ₹2,000 முதல் ₹6,000 வரை கூடுதலாக கிடைப்பதால் ஓய்வூதியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News January 6, 2026

சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் காலமானார்

image

முன்னாள் மத்திய அமைச்சரும் (1995 – 1996), காங்., மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடி (81) உடல்நலக் குறைவால் புனேவில் காலமானார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். இதனிடையே, மறைந்த இவரது உடல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக எரண்ட்வானேவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது. அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 6, 2026

விஜய் படங்களும்.. கடைசி நேர ரிலீஸ் பிரச்னைகளும்!

image

நேற்றைய தினம் ஜனநாயகன் படம் 9-ம் தேதி வெளிவராது, இன்னும் CBFC-யில் இருந்து சான்றிதழ் வரவில்லை என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. அதே நேரத்தில், ரிலீஸ் சமயத்தில் பிரச்னை வந்தால்தான் அது விஜய் படம் எனவும் கிண்டலாக பதிவிட்டனர். இதுவரை வெளிவருவதற்கு முன், அவரின் படங்கள் சந்தித்த கடைசி நேர பிரச்னைகள் என்னென்ன என்பதை அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணுங்க.

error: Content is protected !!