News April 4, 2025
எம்புரான் பட தயாரிப்பாளர் ஆபீஸில் ED ரெய்டு

வசூல் வேட்டையாடி வரும் மோகன்லாலின் ‘L2:எம்புரான்’ பட தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனின் சென்னை அலுவலகத்தில் ED சோதனை நடத்தி வருகிறது. கோகுலம் சிட் பண்ட், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்த ரெய்டு நடக்கிறது. எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்த காட்சிகள் இடம்பெற்ற நாடு முழுவதும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 21, 2025
திறமையின் அடையாளம் மோகன்லால்: PM மோடி

தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ள மோகன்லாலை PM மோடி வாழ்த்தியுள்ளார். திறமையின் அடையாளமாக திகழும் மோகன்லால், பல தசாப்தங்களாக தனது தனித்துவமிக்க கலைத்திறனை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி கேரளாவின் அடையாளமாக உருவெடுத்துள்ளதாகவும், அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கசக்தியாக அமைய வாழ்த்துவதாகவும் PM மோடி தெரிவித்துள்ளார். வரும் 23-ம் தேதி அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.
News September 21, 2025
RRB தேர்வு அக்.13-ம் தேதி நடைபெறும்

CBT-2 தேர்வு அக்டோபர் 13-ம் தேதி நடைபெறும் என RRB அறிவித்துள்ளது. தேர்வுக்கு 4 நாள்களுக்கு முன்பாக கால் லெட்டரை தேர்வர்கள் www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பல்வேறு மண்டலங்களில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளார்க், டைப்பிஸ்ட் என மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பப்படும்.
News September 21, 2025
H1B விசா கட்டண உயர்வு: இவர்களுக்கு மட்டும் விலக்கு

<<17776459>>H1B விசா<<>> கட்டணத்தை அமெரிக்கா பல மடங்கு உயர்த்திய நிலையில், சிலருக்கு விலக்கும் அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே H1B விசா வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதேபோல், 12 அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களாக பிற நாடுகளில் இருப்பவர்கள், இன்றுக்குள் அமெரிக்கா வராவிட்டால் பணம் செலுத்த வேண்டும். மேலும், அமெரிக்க உள்துறை, ராணுவம், பொறியியல், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.