News January 4, 2025
ED சோதனை: துரைமுருகன் வீட்டில் 2 கதவுகள் உடைப்பு

வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. மூடியிருந்த 2 அறைகளை திறக்க சாவி இல்லாததால், கதவுகளை உடைத்து சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக, அவரது வீட்டிற்குக் காலையில் அதிகாரிகள் சென்றபோது, அங்கு யாரும் இல்லாததால் வெளியில் காத்திருந்தனர். பின்னர், வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்திடம் பேச, உறவினர்கள் முன்னிலையில் சோதனை நடக்கிறது.
Similar News
News September 15, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 459 ▶குறள்: மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. ▶பொருள்: மஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.
News September 15, 2025
இதனால் தான் நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது

பாலிவுட் நடிகை <<17692896>>திஷா பதானியின்<<>> உ.பி., வீட்டில், 12-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. திஷாவின் தந்தை ஜகதீஷை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜகதீஷின் இன்னொரு மகள் குஷ்பு, சாமியார் அனிருத்தாச்சார்யாவை விமர்சித்ததே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. 25 வயது வரை திருமணமாகாத பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என அந்த சாமியார் கூறியிருந்தார்.
News September 15, 2025
எனது மூளையின் மதிப்பு ₹200 கோடி: நிதின் கட்கரி

எதனால் கலப்பு பெட்ரோலால் தனது குடும்பம் லாபம் ஈட்டுவதாக காங்கிரஸ் உள்பட பலரது குற்றச்சாட்டுக்களை <<17545460>>நிதின் கட்கரி<<>> மறுத்துள்ளார். தனக்கு பல தொழில்கள் உள்ளதாகவும், அதன் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, பணத்திற்காக முறைகேடுகளில் ஈடுபட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும், தனது மூளையில் இருந்து வரும் யோசனைகள் மூலமே மாதம் ₹200 கோடி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.