News January 7, 2025

கதிர் ஆனந்தை கைது செய்ய ED தீவிரம்

image

2019இல் <<15053599>>₹11.45 கோடி<<>> பறிமுதல் வழக்கில் DMK எம்பி கதிர் ஆனந்த் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன், வங்கி அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நிறைவடைந்தது. ஆனால், 7 முறை சம்மன் அனுப்பியும் கதிர் ஆனந்த் ஆஜராகாததால் தான் அண்மையில் அவர் வீட்டில் சோதனை நடந்துள்ளது. இதனிடையே, கைது செய்யத் தடை விதிக்கக்கோரி கதிர் ஆனந்த் தரப்பு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது.

Similar News

News January 16, 2026

‘அழியாத மை’ சர்ச்சை: ராகுல் காந்தி ஆவேசம்

image

மகாராஷ்டிர <<18870621>>உள்ளாட்சி தேர்தலில்<<>> பயன்படுத்தப்பட்ட <<18865381>>மை<<>> எளிதில் அழிந்து விடுவதாக சர்ச்சை எழுந்தது. இந்த செய்தியை குறிப்பிட்டு ECI-ஐ தாக்கியுள்ளார் ராகுல் காந்தி. இது தொடர்பான எக்ஸ் பதிவில், தேர்தல் ஆணையம் குடிமக்களை குழப்புவதன் மூலம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சரிந்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார். வாக்கை திருடுவது ஒரு தேசவிரோத செயலாகும் என்றும் அவர் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

News January 16, 2026

‘ஆட்டு பொங்கல்’ தெரியுமா?

image

தமிழக மக்களே! மாட்டு பொங்கல் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் ‘ஆட்டு பொங்கல்’ கேள்விப்பட்டு இருக்கீங்களா? நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் மாட்டுப் பொங்கலான இன்று ஆடுகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் ‘ஆட்டு பொங்கல்’ கொண்டாடப்படுகிறது. சில ஊர்களில், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு மட்டுமின்றி, அவற்றைக் காவல் காக்கும் நாய்களுக்கும் மரியாதை செலுத்தும் வழக்கம் காணப்படுகிறது. உங்க ஊரில் எப்படி?

News January 16, 2026

காசாவில் அமைதி வாரியம்: டிரம்ப்

image

போரின் கோரமுகத்தை காசாவும், காசா மக்களும் தினம் தினம் அனுபவித்து வருகின்றனர். இதனால், அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், காசாவில் அமைதியை கொண்டுவர வாரியம் அமைக்கப்படும் என்றும், அதன் தலைவராக டிரம்ப் செயல்படுவார் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் உடனே ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!