News August 17, 2025
ED சோதனை வெறும் ஏமாற்று வேலை: சீமான்

ED நடவடிக்கை வெறும் ஏமாற்று வேலை என சீமான் விமர்சித்துள்ளார். அமைச்சர் ஐ.பெரியசாமி வீடுகள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் E.D சோதனை நடத்தியுள்ளது. இதுபற்றி பேசிய சீமான், ED சோதனையால் என்ன பயன், என கேள்வி எழுப்பிய அவர், ED எங்கெல்லாம் சோதனை நடத்துகிறதோ அங்கெல்லாம் அவர்கள் பணம் வாங்கியிருப்பதாகவும், அதற்கெல்லாம் ஆதாரம் வேண்டுமானால் தானே தருவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News August 17, 2025
BREAKING: பிறந்தநாளில் சின்னம்மாவை இழந்த திருமா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு துக்க நாளாக அமைந்துள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருந்த அவரின் சின்னம்மா செல்லம்மாள் (78) இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் நினைவுகளை கண்ணீருடன் உருக்கமாக பதிவிட்டுள்ள திருமா, சின்னம்மாவின் உடலை பார்க்க விரைந்துள்ளார். அமைச்சர்கள், கட்சியினர் அஞ்சலி செலுத்திய பிறகு அவரின் உடல் இன்று அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.
News August 17, 2025
சாம்பியன் பட்டம் வென்றார் தான்யா ஹேமந்த்

வடக்கு மரியானா தீவுகளில் Saipan International 2025 பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இப்போட்டியானது 15 புள்ளிகள் கொண்ட செட் முறையில் நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தான்யா ஹேமந்த் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். ஜப்பானின் கனே சகாய் உடன் மோதிய அவர், 15-10, 15-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மைசூரைச் சேர்ந்தவர். இவருக்கு வாழ்த்து கூறலாமே..
News August 17, 2025
CM டெல்லி செல்வதாக பரவும் போலிச் செய்தி

அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று ED ரெய்டு நடத்தியது. இதனையடுத்து, PM மோடியை சந்திக்க, CM ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி செல்லவுள்ளதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில், இதை மறுத்துள்ள TN Fact Check, இந்த செய்தி போலியானது; இதை யாரும் நம்ப வேண்டாம். நேற்று சேலம் சென்ற முதல்வர், இன்று தருமபுரியில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார் என்று விளக்கமளித்துள்ளது.