News November 6, 2025
ED-யின் ஹிட் லிஸ்டில் இருக்கும் அமைச்சர்கள்?

அமைச்சர் நேரு தொடர்புடைய இடங்களில் ED நடத்திய ரெய்டில் அரசு துறையில் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அரசியல் தலைவர்கள் அட்டாக் மோடில் இறங்க அறிவாலயம் அதிர்ந்துபோனது. இந்நிலையில், ED-யின் ஹிட் லிஸ்டில் மேலும் பல அமைச்சர்கள் இருக்கின்றனராம். அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு, சக்கரபாணி, மூர்த்தி, அன்பில் மகேஷ் ஆகியோர் ED-யின் ரேடாரில் இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News February 9, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என அண்மையில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி தெரிவித்தனர். இந்நிலையில், உரிமைத் தொகையை ₹1,000-ல் இருந்து ₹2,000 வரை உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குலவிளக்கு திட்டத்தில் மகளிருக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என EPS தேர்தல் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News February 9, 2026
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலிடம்!

முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. ஜி20 நாடுகளில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும் என்று தெரிவித்துள்ளது. அதிகரித்த முதலீடுகள், நிலையான பொருளாதார வளர்ச்சி, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்றும் வருமான வரிச் சலுகைகள் இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
News February 9, 2026
‘நான் சாகப் போகிறேன்’

‘பெற்றோர் பேச்சை கேட்காமல் தாங்கள் விரும்பியவரை திருமணம் செய்யும் பெண்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம். நிறைய கஷ்டப்பட்டுவிட்டேன். விடைபெறுகிறேன்’. ஆந்திராவில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த பத்மாவின்(28) கடைசி வரிகள் இவை. கணவன் வேலைக்குச் செல்லாமல் ஊரை சுற்றி கடன் வாங்கியதால், அப்பெண் சோக முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. உணருங்கள்!


