News December 9, 2025
ECI-ஐ வைத்து ஜனநாயகத்தை சிதைக்கும் மத்திய அரசு: ராகுல்

உடனே SIR பணிகளை நிறுத்த வேண்டும் என லோக் சபாவில் நடத்த விவாதத்தில், ராகுல் காந்தி வலியுறுத்தினார். மேலும் பிரேசில் மாடல் போட்டோ இந்திய வாக்காளர் பட்டியலில் வந்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார். ஜனநாயகத்தை சிதைப்பதற்காக ECI-ஐ பயன்படுத்துகிறது மத்திய அரசு என்றும் அவர் விமர்சித்துள்ளார். அனைத்து இந்திய அமைப்புகளையும் RSS கைப்பற்றிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News December 10, 2025
OPS மகன்கள் அதிமுகவில் இணைகிறார்களா?

OPS மகன்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க மூத்த நிர்வாகிகள் சிலர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனை EPS எதிர்க்கவில்லை என்றாலும், தள்ளிப்போடுகிறார் என விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர். ஒருவேளை மகன்களை சேர்த்துக்கொள்ள EPS தாமதித்தால், தனது ஆதரவாளர்களோடு பாஜக தரும் 5 சீட்களை பெற்றுக்கொண்டு NDA கூட்டணியில் OPS இடம்பெறுவார் என்கின்றனர். இதுபற்றிய Official தகவலுக்கு காத்திருப்போம்.
News December 10, 2025
டைரக்டராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்?

தனக்கு டைரக்ஷனில் ஆர்வம் இருப்பதாகவும், பல கதைகளை எழுதி வருவதாகவும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சொல்லியிருந்தார். இதையொட்டி சில அசோசியேட் இயக்குநர்களை அழைத்து அவர் கதை விவாதம் நடத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு செட் ஆவதுபோல் ஒரு கதையை அவர் உருவாக்கி வருவதாகவும் பேசப்படுகிறது. கதை முழுமையாக தயாரான உடன் இதுகுறித்த Official தகவல் வெளியாகலாம்.
News December 10, 2025
சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைய ஒப்புதல்

அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, EPS தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவில் இணைய ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் தவெக, திமுகவுக்கு செல்வதை தடுக்கவே இந்த முடிவாம்.


