News December 19, 2025

ECI இணையதள சர்வர் முடங்கியது

image

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியான நிலையில், ECI-ன் இணைய பக்கம் முடங்கியுள்ளது. தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக ECI அறிவித்தது. இதனையடுத்து, தங்களது பெயர் விடுபட்டிருக்குமா என்ற அச்சத்தில் பலரும் <>https://voters.eci.gov.in/<<>> இணைய பக்கத்தை அணுகியதால் சர்வர் முடங்கியுள்ளது. யாரெல்லாம் ECI இணைய பக்கத்தில் செக் பண்ணீங்க?

Similar News

News December 20, 2025

எங்களிடமிருந்து முருகரை பிரிக்க முடியாது: சேகர்பாபு

image

CM ஸ்டாலினுக்கு, முருகன் துணையாக இருப்பதால் தான், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக பெரிதுப்படுத்துவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் பாஜகவின் திட்டம் எடுபடாது என்று கூறிய அவர், மாநாடு நடத்தி முருகன் புகழுக்கு, மேலும் புகழ் சேர்த்தது திராவிட மாடல் ஆட்சி என்று குறிப்பிட்டார். எந்த சக்தியாலும் முருகரை தங்களிடமிருந்து பிரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

News December 20, 2025

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

ஜன.10-ல் நடைபெறவிருக்கும் NMMS தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 23-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்கள் <>இத்தேர்வுக்கு <<>>விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ₹48,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

News December 20, 2025

முகப்பருக்களே வரக்கூடாதா? இதுதான் வழி!

image

நாம் சாப்பிடும் சில உணவுகள், சரும ஆரோக்கியத்தை பாதிக்கும். அவற்றை தவிர்த்தால் முகத்தில் பருக்கள், வறட்சியை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் டாக்டர்கள். *கூல் ட்ரிங்ஸ் – இன்சுலின் அளவை அதிகரிக்கிறது *சிப்ஸ் – முகப்பருக்களை மோசமாக்கும் *பாஸ்தா – ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் *ஐஸ்கிரீம் – முகப்பருவை ஏற்படுத்தலாம் *பதப்படுத்தப்பட்ட உணவுகள் சருமத்தை பாதிக்கும் *இனிப்புகள், சரும பிரச்னைகளை உண்டாக்கும்.

error: Content is protected !!