News October 26, 2025

EB கட்டணம் குறைகிறது.. இதை செக் பண்ணுங்க

image

வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதற்காக ₹30,000 முதல் ₹78,000 வரை மானியம் வழங்குகிறது PM சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டம். இதன்படி, உங்க வீட்டில் 4 கிலோவாட் சோலார் பேனல்களை அமைத்தால், ₹2,00,000 வரை செலவாகும். இதில் ₹78,000 வரை அரசு மானியமாக தருகிறது. ஆன் கிரிட் சோலார் பேனல் வகைக்கு மட்டுமே இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் SHARE THIS.

Similar News

News October 26, 2025

நாளை தவெகவுக்கு முக்கியமான நாள்

image

கரூர் துயரம் தொடர்பான வழக்குகள் சென்னை HC-ல் நாளை(அக்.27) விசாரணைக்கு வரவுள்ளன. ➤முன்ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு ➤ஆதவ் அர்ஜுனா மீது பதிந்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு ➤கரூர் எஸ்பி உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய மனு ➤அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிய மனு என தவெக தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன.

News October 26, 2025

கபடி வீரர்களுக்கு ₹25 லட்சம் வழங்கிய CM ஸ்டாலின்

image

ஆசிய யூத் கேம்ஸ் கபடியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா, அபினேஷுக்கு தலா ₹25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி CM ஸ்டாலின் பாராட்டினார். இவர்களை போன்ற எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும், சமூகநீதி மண்ணான தமிழகம் பெருமை கொள்வதாக X-ல் CM கூறியுள்ளார். இச்சந்திப்பின் போது அவ்விருவர் விடுத்த கோரிக்கைகள், நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

News October 26, 2025

10 கிராம் தங்கம் ₹40 லட்சம்.. விலை தாறுமாறாக மாறுகிறது

image

உங்களிடம் ₹1 கோடி இருந்தால், வெறும் 25 கிராம் தங்கம் மட்டுமே வாங்க முடியும் என்றால் நம்ப முடியுமா? 2050-ல் அதுதான் நடக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது, 2000-ல் 24 காரட் தங்கம் 10 கிராம் ₹4,400 மட்டுமே. ஆனால், 2025-ல் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து ₹1.32 லட்சமாக உள்ளது. இதே விகிதத்தில் விலை உயர்ந்தால், 2050-ல் 10 கிராம் தங்கம் ₹40 லட்சமாக அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். SHARE

error: Content is protected !!