News January 1, 2026

EB கட்டணத்தை குறைக்க.. இதை செய்யுங்க!

image

வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதற்காக ₹30,000 முதல் ₹78,000 வரை மானியம் வழங்குகிறது PM சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டம். இதன்படி, உங்கள் வீட்டில் 4 கிலோவாட் சோலார் பேனல்களை அமைத்தால், ₹2,00,000 வரை செலவாகும். இதில் ₹78,000 வரை அரசு மானியமாக தருகிறது. ஆன் கிரிட் சோலார் பேனல் வகைக்கு மட்டுமே இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் SHARE THIS.

Similar News

News January 1, 2026

ஜன.3-ம் தேதி வெளியாகிறது ‘ஜனநாயகன்’ பட டிரெய்லர்

image

பொங்கலையொட்டி ஜன. 9-ம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் ஆடியோ லாஞ்ச் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், டிரெய்லர் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற ஆவல் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. நியூ இயருக்கு டிரெய்லரை வெளியிட முதலில் திட்டமிட்டு, அது தள்ளிப் போய்விட்டது. இந்நிலையில் டிரெய்லர் ஜன.3-ம் தேதி மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

News January 1, 2026

எதிரிகளின் வியூகங்களை தகர்க்க வேண்டும்: ஸ்டாலின்

image

தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து உறுதியாக போராடிக் கொண்டிருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு கையில் வாளை ஏந்தி, உரிமை போர்க்களத்தில் நிற்கிறோம்; மறு கையில் கேடயத்தை ஏந்தி மக்கள் நலனை பாதுகாக்கிறோம். தமிழக மக்கள் படை நமக்கு ஆதரவாக உள்ளது. அதைச் சிதறடிக்க வேண்டும் என்ற எதிரிகளின் வியூகங்களை தகர்த்தெறிந்து, ஜனநாயகப் போர் கலத்தில் வெற்றிபெற வேண்டும் என்றார்.

News January 1, 2026

டி20 WC ஸ்குவாடை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு

image

பிப்ரவரியில் தொடங்கும் டி20 WC அணியை இந்தியா அறிவித்துவிட்டது. அதன்தொடர்ச்சியாக ஒவ்வொரு அணியாக ஸ்குவாடை அறிவித்து வரும் நிலையில், முக்கியமான அப்டேட் ஒன்றை ICC வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31-ம் தேதிக்குள் WC ஸ்குவாடில் மாற்றம் செய்துகொள்ளலாம். இந்தியா வலுவான அணியை அறிவித்திருந்தாலும், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடிந்த பின் அணியில் மாற்றம் செய்வது குறித்து யோசிக்கலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!