News April 23, 2025
அப்பளம் அதிகம் சாப்பிட்டால் ஆபத்து!

வீட்டின் மாடியில் அரிசி வத்தல், ஜவ்வரிசி வத்தல் காயப்போடுவது வழக்கொழிந்துவிட்டது. அதற்கு மாற்றாக ரெடிமேட் அப்பளங்களே இப்போது வீட்டில் அதிகம் பொரிக்கப்படுகின்றன. இதனை அதிகம் உணவில் சேர்ப்பது ஆபத்து என்கின்றனர் டாக்டர்கள். காரணம் இதில் இருக்கும் சோடியம் பென்சோயேட். இது உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் வருவதற்கு வழிவகுக்குமாம். சோ, ரெடிமேட் அப்பளங்களை அளவாக பயன்படுத்துங்கள்.
Similar News
News November 23, 2025
காதுகேளாதோர் ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை சாதனை

டோக்கியோ காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை மஹித் சந்து, 50மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில் அவர் பெறும் 4-வது பதக்கம் இது. ஏற்கெனவே, கலப்பு 10மீ பிரிவில் ஒரு தங்கம், 2 தனிநபர் பிரிவுகளில் 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.
News November 23, 2025
மெட்ரோ திட்டத்தை வைத்து அரசியல்: அண்ணாமலை

கோவை – மெட்ரோ ரயில் திட்டங்களை வைத்து CM ஸ்டாலின் அரசியல் செய்வதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கு 2 முறை வந்த PM மோடியை, CM ஸ்டாலின் இங்கேயே சந்தித்திருக்கலாமே? ஏன் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் எந்த ஒரு மாநில மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் வழங்காத நிதியை சென்னை மெட்ரோ-2 திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 23, 2025
ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்றது

இன்று நடைபெறவிருந்த ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணம் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதியின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, மகாராஷ்டிராவின் சாங்லியில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


