News January 7, 2025
இந்த உணவு சாப்பிட்டால் வடகொரியாவில் சிறை

பன்களுக்கு நடுவே இறைச்சி வைத்து சமைக்கப்படும் Hot Dogs உணவுக்கு வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமல்ல, உணவுக்கும் எதிரானவர் அதிபர் கிம் ஜாங் உன். தடையை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாம். Flakes, Kimchi உள்ளிட்ட பல மேற்கத்திய, தென்கொரிய உணவுகளுக்கு அங்கு ஏற்கெனவே தடை உள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய தாக்கத்தை தடுக்கவே இந்த நடவடிக்கையாம்.
Similar News
News September 14, 2025
பாஜக அதிகாரத்தை பறிக்கிறது: விஜய்

தென் இந்தியாவின் அதிகாரத்தை பாஜக பறிக்கிறது என தேர்தல் பரப்புரையில் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். அரியலூர் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வாக்கு திருட்டு, தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுத்தார். பாஜக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதாகவும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் இந்தியாவிற்கு துரோகம் செய்கிறது எனவும் அவர் சாடினார்.
News September 14, 2025
ராசி பலன்கள் (14.09.2025)

➤மேஷம் – புகழ் ➤ரிஷபம் – கீர்த்தி ➤மிதுனம் – சுபம் ➤கடகம் – நட்பு ➤சிம்மம் – அன்பு ➤கன்னி – சாந்தம் ➤துலாம் – வெற்றி ➤விருச்சிகம் – வரவு ➤தனுசு – சுகம் ➤மகரம் – கோபம் ➤கும்பம் – பாராட்டு ➤மீனம் – திறமை.
News September 14, 2025
இளையராஜாவின் ரத்தத்தில் இசை ஊறியுள்ளது: ரஜினி

இளையராஜா என்ற எளிய மனிதனுக்கு பிரமாண்ட விழாவை தமிழக அரசு நடத்தியுள்ளதாக ரஜினி தெரிவித்தார். தன் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா என தெரிவித்த அவர், இளையராஜாவின் நாடி, நரம்பு, ரத்தத்தில் இசை ஊறியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். பல சோகங்களை வாழ்வில் கண்ட இளையராஜா, SPB மறைவுக்கு சிந்திய கண்ணீரை யாருக்கும் சிந்தவில்லை என ரஜினி தெரிவித்தார்.