News April 21, 2024
உணவருந்திய உடன் ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டால் ஆபத்து

ஆரஞ்சுப் பழம், அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழமாகும். அதில் வைட்டமின் சி சத்துகள் உள்ளன. அதேபோல் சிட்ரஸ் அமிலமும் அதிகம் உள்ளது. அதனால் உணவருந்திய உடனே ஆரஞ்சை பழமாகவோ அல்லது பழச்சாறாகவோ சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால், சிட்ரஸ் அமிலம், உடலில் நச்சுக்களை ஏற்படுத்தி பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆதலால் உணவருந்திய பிறகு ஆரஞ்சுப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்போம்.
Similar News
News January 31, 2026
‘ஜன நாயகன்’ விவகாரத்தில் மனம் திறந்த விஜய்

‘ஜன நாயகன்’ படத்திற்கு சிக்கல்கள் வரும் என தான் முன்பே கணித்ததாக விஜய் மனம் திறந்து பேசியுள்ளார். தனியார் ஊடகத்திற்கு நேர்காணல் அளித்த அவர், பொங்கலுக்கு ரிலீசாக இருந்த ஜன நாயகன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் வேதனையளிப்பதாகவும், தயாரிப்பாளருக்காக வருத்தப்படுவதாகவும் முதல் முறையாக பேசியுள்ளார். இந்த பட விவகாரத்தில் விஜய் ஏன் மவுனியாக இருக்கிறார் என பலரும் விமர்சனம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
News January 31, 2026
ஈரானுக்கு தேதி குறித்த டிரம்ப்.. மிரட்டலும் விடுக்கிறார்!

ஈரானை நோக்கி நிறைய போர் கப்பல்களை அனுப்பவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புவதாக கூறிய அவர், அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பார்கள் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், இதற்காக ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதாகவும் அது ஈரானுக்கு மட்டுமே தெரியும் எனவும் கூறியுள்ளார்.
News January 31, 2026
ஸ்டாலின் – ராமதாஸ் ரகசிய Phone Call? தகவல் கசிந்தது..

விசிக எதிர்ப்பால் ராமதாஸ் தரப்புடனான கூட்டணியை திமுக ஹோல்டில் போட்டுவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்டாலினிடம் ராமதாஸ் போன் காலில் பேசியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கிவிட்டு பிறகு ராமதாஸுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசுவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறாராம். இதனால் விரைவில் திமுக-ராமதாஸ் பாமக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.


