News June 25, 2024
ஃபோனில் எளிதாக ரயில் டிக்கெட் புக் செய்யலாம்! (3/3)

பயணிகளின் விவரங்களை அளித்த பிறகு, Credit Card, Debit Card, UPI, Online Banking ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து பணம் செலுத்த வேண்டும். பிறகு, டிக்கெட் புக் செய்ததற்கான மெசேஜ் பதிவு செய்த செல்போன் எண் மற்றும் இமெயிலில் கிடைக்க பெறும். அதிகபட்சமாக ஒரு முறை 6 டிக்கெட்டும், மாதம் 24 டிக்கெட்டும் நீங்கள் புக் செய்யலாம். ஆதார் விவரங்கள் தராதபட்சத்தில், 12 டிக்கெட் மட்டுமே புக் செய்ய முடியும்.
Similar News
News September 19, 2025
13 பந்துகளில் அரைசதம்.. அதிரடி காட்டிய வீரர்

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனையை நமீபியா வீரர் ஜேன் ஃபிரைலிங்க் படைத்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20-ல், வெறும் 13 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் விரட்டி 77 ரன்கள் எடுத்தார். நமீபியா 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்த நிலையில், சேஸ் செய்த ஜிம்பாப்வே 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
News September 19, 2025
இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா

ஈரான் மீதான பொருளாதாரத் தடையில், அந்நாட்டின் சாபஹார் துறைமுகத்துக்கு அளித்துவந்த விலக்கை நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியாக மாறும். ஐரோப்பா, ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகளுடன் வணிகத் தொடர்புக்காக சாபஹார் துறைமுகத்தை பெரும் பொருள் செலவில் இந்தியா மேம்படுத்தியது. அமெரிக்காவின் தடையால், இவ்வழியாக இந்தியாவின் வணிகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
News September 19, 2025
ரோபோ சங்கர் மறைவு வேதனையளிக்கிறது: தமிழிசை

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை ஜொலித்த நடிகர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தமிழிசை செளந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழிசை, திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.