News January 7, 2025

எவரெஸ்ட் சிகரத்தை ஆட்டம் காண வைத்த நிலநடுக்கம்

image

நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் எவரெஸ்ட் சிகரத்திலும் எதிரொலித்துள்ளது. எவரெஸ்ட் மலையில் 4.5 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால், அப்பகுதியில் பனிச்சரிவும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கடந்தகாலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எவரெஸ்டின் உயரமும் கட்டமைப்பும் லேசாக மாற்றம் கண்டது. இந்த முறை என்ன ஆகுமோ.. தற்போது சிகரத்தில் ஏறச் சென்றவர்கள் நிலை பற்றி இதுவரை தகவல் இல்லை.

Similar News

News January 15, 2026

BREAKING: ஜன நாயகன்.. சற்று நேரத்தில் புதிய அப்டேட்

image

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் வழங்கக்கோரி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு SC-யில் விசாரணைக்கு வருகிறது. U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து படக்குழு தொடர்ந்த வழக்கில், SC இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது. ஒருவேளை சென்சார் கொடுக்க ஆணையிட்டால், விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

News January 15, 2026

செல்வப்பெருந்தகை தேர்தலுக்கு முன்பே மாற்றப்படுகிறாரா?

image

செல்வப்பெருந்தகைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சிலர் டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவரது தலைமையின் கீழ் கட்சி அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், கட்சியில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துவதாகவும், தனது நலன் சார்ந்தே முடிவுகளை எடுப்பதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளதாம். வரும் தேர்தலுக்குள் இவர் மாற்றப்பட வேண்டும் எனவும் கட்சியினர் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

News January 15, 2026

அல்லு அர்ஜுன் தான் கோலிவுட்டின் அடுத்த உச்சமா?

image

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேஸிங்கில் தீவிரம் காட்டுகிறார். ரஜினி, கமல் சீனியர் ஆகிவிட்டனர். அதனால் தற்போது கோலிவுட்டில் வெற்றிடம் உருவாகி இருக்கிறதாம். இச்சூழலை பயன்படுத்தி, கோலிவுட்டின் அடுத்த உச்ச நடிகராக மாற, அல்லு அர்ஜுன் முயற்சிக்கிறாராம். அதனால்தான், அட்லீ, லோகேஷ் ஆகியோருடன் இணைவதாகவும், அவர்தான் கோலிவுட்டின் அடுத்த உச்சம் என சிலர் கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!