News April 12, 2025

பப்புவா நியூ கினியில் திடீர் நிலநடுக்கம்!

image

பசிபிக் நாடான பப்புவா நியூ கினியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானதால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. Kokopoவில் இருந்து தென்கிழக்கே 115 கி.மீ தொலைவில் மையமாக கொண்டு 72 கி.மீ ஆழத்தில் நிலநிடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில நிமிடங்களே அதிர்வு நீடித்ததால், அப்பகுதியில் சேதங்கள் ஏற்படவில்லை. எனினும் நிலச்சரிவு அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டது.

Similar News

News April 19, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னா செய்யாமை ▶குறள் எண்: 31▶குறள்: சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள். ▶பொருள்: மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.

News April 19, 2025

3 அமைச்சர்களை டார்கெட் செய்யும் அதிமுக

image

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக சமீபத்தில் அதிமுக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. இந்நிலையில், இந்த மூன்று அமைச்சர்கள் விவகாரங்களை கையில் எடுத்து, மக்கள் மத்தியில் அதிமுக தீவிரமாக பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நேரத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக முதல்வருக்கும் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.

News April 19, 2025

இது என்னடா புது கதையா இருக்கு.. அதிர்ச்சியூட்டும் ஆய்வு

image

திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. ஆம்! திருமணம் செய்து கொள்வதால், நினைவாற்றல் பாதிக்கப்பட (Dementia)வாய்ப்புள்ளதாக ஃப்லோரிடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, திருமணமாகாதவர்கள் , விவாகரத்து ஆனவர்களுக்கு இந்த பாதிப்பு குறைவாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!