News March 30, 2025
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்.. மக்கள் பீதி

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பகல் 12.38 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது. 2 நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மியான்மர் உருக்குலைந்து உள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Similar News
News April 1, 2025
பங்குச்சந்தைகள் கடும் சரிவு

நிதியாண்டின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவினை கண்டிருக்கின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 354 புள்ளிகளையும் சென்செக்ஸ் 1390 புள்ளிகளையும் இழந்துள்ளது. கடந்த சில நாள்களாக மேல் நோக்கி சென்று கொண்டிருந்த பங்குச்சந்தை, இன்று சரிவடைந்திருப்பது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
News April 1, 2025
பலாத்காரம் செய்த பாதிரியார்… கோர்ட் அதிரடி தீர்ப்பு

பஞ்சாபில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மொஹாலி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தனது வித்தியாசமான அணுகுமுறையால் பிரபலமானவர் ‘இயேசு! இயேசு!’ பாதிரியார் பஜிந்தர் சிங். இவர் வெளிநாட்டு பயணத்துக்கு உதவுவதாக கூறி 2018-ல், அப்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்து, தொடர்ந்து மிரட்டியும் வந்துள்ளார். இதுபோல பல பெண்களை இவர் வன்கொடுமை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
News April 1, 2025
தமிழக பாஜகவுக்கு அடுத்த வாரம் புதிய தலைவர்?

தமிழக பாஜகவுக்கு அடுத்த வாரம் புதிய தலைவர் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்த பிறகு ஏப்ரல் 8 – 10 தேதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. எல்.முருகன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரின் பெயர்கள் மாநிலத் தலைவர் பதவிக்கும், வானதி சீனிவாசன் பெயர் தேசிய தலைவர் பதவிக்கும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.