News February 13, 2025

டீ விற்றால் தினசரி ரூ.7,000 வருமானம்: எங்கே தெரியுமா?

image

உ.பி. கும்பமேளாவில் தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அப்படி வரும் பக்தர்களிடம் டீ விற்று, நாளொன்றுக்கு ₹7,000 வருமானம் ஈட்டுவதாக இன்ஸ்டா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் மூலதனச் செலவு ₹2,000 போக, லாபம் மட்டும் ₹5,000 நிற்பதாக அவர் கூறியுள்ளார். இதன்படி பார்த்தால், ஒரு மாதத்தில் அவர் ₹1.50 லட்சம் வருமானம் ஈட்டுவார். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என சும்மாவா சொன்னார்கள்.

Similar News

News February 13, 2025

விரும்பும் மதுவகை இல்லை; மது பிரியர்கள் கவலை

image

டாஸ்மாக் நிர்வாகம் உயர்ரக மதுவகைகளை விற்பனை செய்வதற்காக எலைட் கடைகளை நடத்தி வருகிறது. அதில் சென்னையின் பல பகுதிகளில் உள்ள எலைட் கடைகளில் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகள், பீர் வகைகள் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. போதிய சப்ளை இல்லாததே இதற்கு காரணம் என்று எலைட் கடைகளில் கூறப்படுகிறது. உங்கள் பகுதி கடைகளில் ப்ரீமியம் மதுவகை கிடைக்கிறதா?

News February 13, 2025

நேற்று… இன்று… நாளை யாரோ? ரவீந்திரநாத்

image

அதிமுக மூத்த தலைவர் RB உதயகுமாரின் அரசியல் நிலைப்பாடுகளை, OPS மகன் ரவீந்திரநாத் விமர்சித்துள்ளார். “நேற்று அம்மாவின் மறுஉருவம் சின்னம்மா, இன்று எம்ஜிஆர்-அம்மாவின் மறுஉருவம் இபிஎஸ், நாளை யாரோ?” என அரசியல் நிலைப்பாடுகளை RB உதயகுமார் மாற்றிப் பேசுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, இன்று பேட்டியளித்த RB உதயகுமார், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு EPS எனக் கூறியிருந்தார்.

News February 13, 2025

WORK FROM HOME: L&T சுப்பிரமணியன் அதிருப்தி

image

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வரும் L&T நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன், தற்போது WORK FROM HOME குறித்தும் பேசியுள்ளார். 1983இல் நான் ஐடி கம்பெனியில் சேர்ந்த போது சென்னையில் இருந்து டெல்லிக்கு என்னை மாற்றினார்கள். ஆனால், இப்போது ஐடி ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை பார்க்க சொன்னாலே, அவர்கள் டாடா காட்டிவிட்டு போய் விடுகிறார்கள். உலகம் மாறிவிட்டது எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!