News May 3, 2024
ரேவண்ணா ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை

பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு எம்பி ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார். மைசூர் கே.ஆர்.காவல் நிலையத்தில் ஒரு நபர், ரேவண்ணா அழைத்ததாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட தன் தாயைக் காணவில்லை என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, இன்று புதிதாக மேலும் ஒரு முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
Similar News
News February 7, 2026
பும்ராவுக்கு வைரஸ் காய்ச்சல்… முதல் மேட்ச்சில் ஆப்சென்டா?

டி20 உலக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று இரவு அமெரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாம். இதனால் சிராஜ் இன்றைய போட்டியில் களம் காண்பார் என கூறப்படுகிறது.
News February 7, 2026
1 O’Clock என்பதில் ‘O’ அர்த்தம் தெரியுமா?

இப்போதும் டைம் என்ன என கேட்டால், 1 மணியை ஆங்கிலத்தில் 1 O’Clock என்பார்கள். அதில், ‘O’ க்கான அர்த்தம் தெரியுமா? கடிகாரங்களின் வருகைக்கு முன்பு, சன் டயல் போன்ற முறைகளில் நேரம் கணக்கிடுவது வழக்கத்தில் இருந்தது. கடிகாரங்களின் வருகைக்குப் பிறகு, ‘of the clock’ என கூறத் தொடங்கினார்கள். உதாரணமாக, மணி 1 என்றால், அதனை ‘1 of the clock’ என்றார்கள். அதுவே காலப்போக்கில், 1 O’Clock என மாறிவிட்டது. SHARE.
News February 7, 2026
அண்ணாமலை நற்பணி மன்றத்தின் அதிரடி முடிவு

‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ 58 பாஜக மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டம் நெல்லையில் நடைபெறவுள்ளது. இதில், அண்ணாமலையை சட்டப்பேரவைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. குறிப்பாக, நாங்குநேரி தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க விருப்ப மனு அளிக்கவும் மன்றத்தினர் தயாராகவுள்ளனராம். உங்கள் கருத்து என்ன?


