News April 2, 2024

சற்றுமுன்: பாஜகவில் மோதல் வெடித்தது

image

கர்நாடக பாஜகவில் உட்கட்சி மோதல் உச்சமடைந்துள்ளதால், பெங்களூரு வந்துள்ள அமித் ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். ஷோபா கரந்தலஜேவுக்கு எதிராக சதானந்தா கவுடா ஆதரவாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சிக்கமங்களூருவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அண்ணாமலையின் நண்பர் சி.டி.ரவி, மைசூருவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரதாப் சின்ஹாவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Similar News

News December 29, 2025

பிரவீன் சக்ரவர்த்திக்கு எதிராக பாயும் காங்., MP-க்கள்

image

உ.பி.,யை விட TN அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக காங்., நிர்வாகி <<18699142>>பிரவீன் கூறியதை<<>> காங்., MP-க்கள் எதிர்த்துள்ளனர். மாநிலங்களை கடனை மட்டும் வைத்து மதிப்பிடுவது, வெறும் எடையை மட்டும் வைத்து உடற்தகுதியை தீர்மானிப்பது போன்றது என சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். அத்துடன், கல்வி சுகாதாரத்தில் முன்னோடியான TN-ஐ, மனித வளர்ச்சி குறியீட்டில் பின்தங்கியுள்ள உபி உடன் ஒப்பிடக்கூடாது என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

இந்தியாவில் BTS Concert! எங்கே தெரியுமா?

image

கொரியன் பாப் இசையை உலகளவில் பிரபலமாக்கிய ‘BTS’ குழு இந்தியாவில் கான்சர்ட் நடத்த திட்டமிட்டுள்ளது. 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் இந்த கான்சர்ட்டை நடத்த அதன் நிர்வாகக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. அடுத்த ஆண்டில் இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு இடங்களில் சுமார் 60 கான்சர்ட்டுகளை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. நீங்கள் கொரியன் பாப் இசையை கேட்டிருக்கீங்களா?

News December 29, 2025

விஜய்யை விசாரிக்க சிபிஐ திட்டம்?

image

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக பொ.செ., புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அவர்கள் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளனர். இதனிடையே, விஜய்யிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு அதற்கான கேள்விகளை CBI இறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, விரைவில் விஜய்க்கு சம்மன் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

error: Content is protected !!