News July 24, 2024
சற்றுமுன்: சவுக்கு சங்கருக்கு ஜாமின்

பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்த ஹோட்டல் அதிபரிடம் தனது யூடியூபில் விளம்பரம் செய்வதாகக் கூறி ₹7 லட்சம் பணம் பெற்றுள்ளார். சொன்னபடி விளம்பரம் செய்யாததுடன், பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுதொடர்பான புகாரில், கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.
Similar News
News March 3, 2026
‘கூட்டணியிலிருந்து விலகுங்கள்’.. மதிமுகவில் குமுறல்

2021-ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4-ல் வெற்றிபெற்றது. இம்முறை ECI-ன் அங்கீகாரத்தை மீண்டும் பெற 12 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், தனி சின்னம் கோரிக்கைகளை வைகோ முன்வைத்ததாக தெரிகிறது. ஆனால், உதயசூரியன் என்றால் 4, தனி சின்னம் என்றால் 3 தொகுதிகள் என திமுக சொல்லிவிட்டதாம். இதை ஏற்க முடியாத <<19223088>>மதிமுக <<>>தொண்டர்கள் சிலர், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுங்கள் என வைகோவிடம் கூறியுள்ளார்களாம்.
News March 3, 2026
மார்ச் 6-ல் அதிமுக தொகுதிப்பங்கீடு அறிவிப்பா?

யாருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்குவது, தொகுதிப்பங்கீடு உள்ளிட்டவை குறித்து நாளை அதிமுக மா.செ.க்களின் கருத்துகளை EPS கேட்கவிருக்கிறார். ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5-ம் தேதியுடன் முடியும் நிலையில், யாருக்கு MP பதவி வழங்குவது என 4-ம் தேதி அறிவிக்கவிருப்பதாகவும், மார்ச் 6-ம் தேதி தொகுதிப்பங்கீட்டு பட்டியல் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News March 3, 2026
மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் மகிழ்ச்சி செய்தி

மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல முத்திரைத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வேறு மாநில அரசு நாட்டிலேயே நிச்சயமாக இருக்க முடியாது என்று CM ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதுபோன்ற திட்டங்களை சிறிய குளறுபடி இல்லாமல் சரியாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே, உயர்த்தப்பட்ட தொகை ₹2,000, திமுக ஆட்சி அமைந்தால் ஜூனில் இருந்து வரவு வைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


