News March 22, 2024

சற்றுமுன்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் காவல்

image

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் ED காவல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Similar News

News October 23, 2025

மரங்கள் ஒன்றோடு ஒன்று பேசும்; எப்படி தெரியுமா?

image

மரத்தின் வேர்கள் mycorrhizal பூஞ்சைகள் மூலம் பூமியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மரத்தின் இலையை பூச்சிகள் சாப்பிட்டு அழித்தால், மரத்தின் வேரில் இருந்து ரசாயன சிக்னல்கள் வெளியேறும். பூஞ்சைகள் இந்த சிக்னலை மற்ற மரங்களுக்கு கடத்தும். இந்த சிக்னல்களை புரிந்துகொள்ளும் பிற மரங்கள் தங்கள் மரத்தின் இலைகள் பூச்சிகள் சாப்பிடாத படி கசப்பாக மாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. SHARE.

News October 23, 2025

BREAKING: முக்கிய அமைச்சரை தூக்குகிறாரா CM ஸ்டாலின்?

image

கனமழையால் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் CM ஸ்டாலின், உதயநிதி சுழன்று சுழன்று பணியாற்றி வருகின்றனர். ஆனால், வருவாய் பேரிடர் துறை அமைச்சராக உள்ள KKSSR வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் சுணக்கம் காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. வரும் தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்க திமுக தலைமை ஆர்வம் காட்டவில்லை என்பதால், மக்கள் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

News October 23, 2025

சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்வரே? நயினார்

image

தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் அரசு ஹாஸ்பிடல்கள் அமைக்கப்படும் என சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்வரே என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ₹110 கோடி செலவில் கட்டப்பட்டதாக விளம்பரப்படுத்தும் தாம்பரம் அரசு ஹாஸ்பிடலில் குடிநீர், கழிவறை வசதி கூட இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், சோழிங்கநல்லூர், மதுரவாயலில் செங்கலை கூட நாட்டவில்லை என்றும் சாடியுள்ளார்.

error: Content is protected !!