News May 7, 2025
ஒவ்வொரு சிக்ஸும் ஆறு வீடுகளில் ஒளியேற்றும்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. மும்பை இந்தியன்ஸுடன் மோதும் இன்றைய ஆட்டத்தில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்ஸருக்கும், ஆறு வீடுகளில் சூரிய பேனல் மூலம் மின்சார இணைப்பு கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் அடித்தட்டு மக்களுக்கு உதவ முடியும், சுற்றுச்சூழல் காக்கவும் உதவலாம். ராஜஸ்தான் ராயல்ஸின் இந்த ‘பிங்க் ப்ராமிஸ்’ பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Similar News
News December 2, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 2, கார்த்திகை 16 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News December 2, 2025
இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்: PM மோடி

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயலால் இதுவரை 360-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொலைபேசி வாயிலாக அதிபர் அநுரகுமார திசாநாயக்கவுடன் பேசிய மோடி, இந்தியா இலங்கை மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் என தெரிவித்துள்ளார். மேலும் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் இந்தியா வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
News December 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


