News November 15, 2024
₹115 கோடி முதலீடு திரட்டியது இ-பிளேன்

ஏர் டாக்ஸி தயாரிக்கும் நிறுவனமான இ-பிளேன், ₹115 கோடி முதலீடு திரட்டியுள்ளது. சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் சிறிய ரக விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நகரங்களுக்கு இடையே விரைவான போக்குவரத்தை வழங்கும் வகையில், சென்னை ஐஐடி உதவியுடன் இந்த ஏர் டாக்ஸி தயாராகி வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த டாக்ஸியில் 200 கி.மீ. வரை பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது.
Similar News
News August 16, 2025
இன்று வாஜ்பாயின் நினைவு தினம்!

Ex PM அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. மக்கள் நலனே தனது அரசியலின் நோக்கமாகக் கொண்டு பணியாற்றியவர், பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா மூலம் கிராமங்களுக்கு சாலை, சர்வஜனிக் கல்வி திட்டம் மூலம் கல்வி, – அந்த்யோதயா அன்ன யோஜனா மூலம் குறைந்த விலையில் அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் என மக்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றியவர்.
News August 16, 2025
எத்தகைய சீர்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: கார்கே

ஆட்சியில் தொடர எத்தகைய சீர்கேட்டிலும் பாஜக ஈடுபடுமென கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார். பிஹாரில் 65 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் யார் பலனடைகின்றனர் என்பது தெளிவாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும், மோசடிகளை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தை காப்பதற்கானது எனக் கூறினார்.
News August 16, 2025
PAN கார்டு அப்ளை பண்றீங்களா.. இத கவனியுங்க!

பான் கார்டு சேவைகளை பெற விரும்புவோர் இத்தகவலை கவனித்துக் கொள்ளுங்கள். இன்று நள்ளிரவு(ஆகஸ்ட் 17) 12 மணி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை வருமான வரித்துறையின் இணையதளம் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக, சேவைகள் நிறுத்தப்படுகிறது. எனவே, சேவைகளை பெற விரும்புவோர் 3 தினங்கள் கழித்து விண்ணப்பிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.