News August 6, 2025
e-NAM ஏலத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வை.!

இன்று 05/08/2025., போச்சம்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் e-NAM (மின்னனு தேசிய வேளாண் சந்தை) மூலம் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுடன் நேரில் கலந்துரையாடினார். விவசாயிகளின் தேவைகள், சந்தை நிலைமைகள் குறித்து கேட்டறிந்து, சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
Similar News
News August 6, 2025
ஒசூா் அருகே குழந்தை உயிரிழப்பு

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் சிலம்பரசன். இவா் ஒசூா் பகுதியில் குடியிருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவரது இரண்டரை வயது மகன் பைரவன். கடந்த 31-ம் தேதி வீட்டில் குளியல் அறையில் கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்தாா். உடல் முழுவதும் காயம் அடைந்த பைரவனை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 6, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட துணை அமைப்பாளர் காலமானார்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளராக இருந்த குட்டப்பள்ளியை சேர்ந்த ஆர். சிவகுமார் இன்று காலை 7 மணி அளவில் திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவால் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். அவரது கட்சி பணி மற்றும் சமூக சேவைகள் குறித்து பலர் கூறி வருகின்றனர். மாவட்ட திமுகவினர் ஆழ்ந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News August 6, 2025
கிருஷ்ணகிரி: ரேஷன் கடைகளில் முறைகேடா? இத பண்ணுங்க!

கிருஷ்ணகிரி ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். <