News August 20, 2024
‘முத்ரா’ லோனிற்கும் இனி e-KYC கட்டாயம்

சுயதொழிலை ஊக்குவிக்க ‘முத்ரா’ கடன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதில் நடக்கும் மோசடிகளை தடுக்க, விரைவில் e-KYC முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கடன் பெறுவோரின் தகுதியை எளிதில் மதிப்பிட்டு, தகுதியான நபர்களுக்கு கடன் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதற்காக ‘இம்பேக்ட் அசெஸ்மென்ட் ஆஃப் PM முத்ரா யோஜனா’ என்ற பெயரில் சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது.
Similar News
News August 15, 2025
நாமக்கல் எஸ்பி-க்கு விருது: எம்.பி வாழ்த்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறையின் 24 அலுவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருது பட்டியலில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா சிறந்தசேவையை, பாராட்டி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
News August 15, 2025
அரங்கம் அதிர வைத்த ‘கூலி’ முதல் நாள் வசூல்!

ரஜினி- லோகேஷ் கனகராஜ் காம்போவில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், படத்தின் வசூலை அது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இந்த படம் முதல் நாளில் மட்டும் ₹151 கோடி வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் நாளில் தமிழ் படம் ஒன்றின் அதிகபட்ச வசூல் இதுவே. நீங்க படம் பாத்துட்டீங்களா.. எப்படி இருக்கு?
News August 15, 2025
CINEMA ROUNDUP: செப்.5-ம் தேதி வெளியாகும் ‘காந்தி கண்ணாடி’

◆உலக சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘சிசு’ படத்தின் 2-ம் பாகம் வரும் நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
◆நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘Dear Students’ படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
◆KPY பாலா ஹீரோவாக நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில்தான், SK-ன் ‘மதராஸி’ படமும் வெளிவருகிறது.